சிறகுகள்
என்னிடம் கேட்டேன்
சிறகுதிர்த்து விடவா?
சிறகடித்து வரவா?
கண்கள் திறக்கவா?
வானம் பார்க்கவா?
பறந்து விடவா?
ஆகாயம் சென்று பார்க்கவா?
அதன் அழகை உன்னிடம் சொல்லவா?
வெகு தூரம் செல்லவா?
களைத்த பின் திரும்பவா?
விண்ணுலகம் வேண்டாம்
என்னுலகம் போதும்
கட்டுகள் அவிழ்த்து பறக்க
ஆகாயம் வேண்டாம்
அகல இடம் போதும்.
உயரே பறக்கப் போகிறேன்
சிறகுகள் விரித்து
தடைகள் முறித்து.
இனிய காற்றின் சுவாசம்
விடைபெறு மனமே
என் எண்ணம் உன் தேசம்.

1 comment:
Fly fly !
Post a Comment